என் மீதான வதந்திகள் அபாண்டமானது - வன்னியூர் சஜீதா.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, October 21, 2019

என் மீதான வதந்திகள் அபாண்டமானது - வன்னியூர் சஜீதா.!!!

என் மீதான வதந்திகள் அபாண்டமானது -  வன்னியூர் சஜீதா.!!!

வன்னியூர் சஜீதா தொடர்பாக அண்மையில் "அதிர்வு நியூஸ்"  இனையத்தளம் குறித்த நபரது சமூக சேவையினையும் தனிப்பட்ட விமர்சனத்தையும் தமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக எமது இணையத்திற்கு வன்னியூர் சஜீதா முறைப்பாடொன்றினை முன் வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது -

ஒரு நாட்டில் செயற்பட்டு வரும் ஊடகங்கள் ஊடக தர்மத்தினை கடைப்பிடிப்பதோடு மட்டுமல்லாமல்  தனி ஒருவரை தமது தேவைகளுக்கேற்ப வதந்திகள் மூலம் விமர்சிப்பது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகமானது அனைத்து விதமான சமூகவியல் கருத்துக்களையும் அன்றாடம் இடம்பெறும் நிகழ்வுகளையும் பதிவேற்றுவதை விடுத்து சமூக விரோத கருத்துக்களையும் தனிமனித உரிமையை மீறுவதாகவுமே செயற்பட்டு வருகின்றன சில ஊடகங்கள்.

ஊடகப்பணி என்பது ஒரு சவால் மிக்க பணி என்பது ஏற்புடையதே, ஆனால் -  தற்போது சில ஊடகங்கள் ஊடக தர்மம் என்ற சொல்லுக்கே அர்த்தம் மறந்து வியாபார நோக்கம் கருதியதாகவும், தம் இனையத்தளத்தை பிரபல்யப்படுத்தவும், கிடைக்கின்ற தகவல்களை மெருகூட்டுவதும்,குறித்த செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராயாது பதிவேற்றம் செய்வதும்  கண்டிக்கத்தக்கதும் மனவருத்தத்துக்குரியதாகவும் காணப்படுகின்றது.

குறிப்பாக தனி நபர்கள் சம்மந்தமான தகவல்களை அவர்கள் புகைப்படங்களோடு பதிவேற்றம் செய்யும் போது அத்தகவலின் உண்மைத் தன்மையினை ஆராயாது அந்த நபரின் தன்மானத்தையும் அவர் எதிர் காலத்தையும் விலை பேசும் செயலையுமே அரங்கேற்றி வருகின்றது.

ஒரு சில ஊடகங்களின் இது போன்ற தகவல் பதிவேற்றங்களால் கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவிகள் உற்பட பலர் தற்கொலை செய்ததும், மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதும் நினைவு கொள்ளத்தக்கது.

அண்மையில் ஒரு சமூக சேவையாற்றிவரும் வன்னியூர் சஜீதா பற்றி மிகவும் அவதூறாக உண்மைக்கு புறம்பாக குறித்த அதிர்வு நியூஸ் எனும் இணையத்தளத்திலே செய்தி வெளியாகியது. குறித்த செய்தியானது அந் நபரையும் அவரது குடும்பத்தாரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளமை  வேதனைக்குரியதாகும்.

குறித்த ஊடகம் இனிவரும் காலங்களில்  இவ்வாறான  தனிநபர் சம்மந்தமாக தரப்படும் தகவல்களை ஆராய்வதும் அதன் உண்மைத் தன்மையினை அறிவதும் தார்மீக பொறுப்பாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு ஊடகத்தின் வாயிலாக ஒருவரின் நற் பெயரோ,தன்மானமோ இழக்கப்படுமாயின் அது ஊடக தர்மம் அல்ல.
எனவே இனிமேலும் இப்படியான தகவல்களை "புனை பெயர்களில்" தருபவர்களை அடையாளம் கண்டு பிரசுரிப்பது சிறந்ததாக அமையும் இதனை இனையத்தள ஊடகங்கள் கருத்தில் எடுக்க வேண்டும்.

ஆதரங்கள் எதுவுமற்ற விமர்சனங்கள் என்னை எதுவும் செய்து விட போவதில்லை.
" எனக்கென்ற தமிழ் பற்று - என்னாலான சமூக சேவை. இவை எனதானது என வன்னியூர் சஜீதா எமது இணையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here