இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை உடன் அமுலக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரும் வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
ரூபவாஹினியின் தலைவர் இனோகா சத்தியலிங்கம் பதவியில் இருந்து விலகாமையை இதற்கு காரணமாக காட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு பின்னால் பாரிய அரசியல் புரட்சி ஒன்று உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியை எச்சரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக செயற்பட்ட அனைத்து தரப்பினரும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர்.
2003ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி பாதுகாப்பு, ஊடகம் உட்பட மூன்று அமைச்சுக்களை தன் கீழ் கொண்டுவருவதற்கு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, நடவடிக்கை மேற்கொண்டார். அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. 2004ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை கலைத்தார்.
சந்திரிக்கா தற்போது மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துள்ளார். இந்நிலையில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளார்.
இதேவேளை, “2019ஆம் ஆண்டு தேர்தல் போராட்டம் ஆரம்பம்” என மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் பேஸ்புக் பதிவொன்றை நேற்று இரவு பதிவிட்டு குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Kpio
No comments:
Post a Comment