பயங்கரவாதிகளை முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பின் மூலமே அழிக்க முடிந்தது - அமைச்சர் தயாகமகே தெரிப்பு.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, July 23, 2019

பயங்கரவாதிகளை முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பின் மூலமே அழிக்க முடிந்தது - அமைச்சர் தயாகமகே தெரிப்பு.!!!

பயங்கரவாதிகளை முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பின் மூலமே அழிக்க முடிந்தது   -  அமைச்சர் தயாகமகே தெரிப்பு.!!!


இந்த அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் நாட்டில் பல்வேறு அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றது என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறுகம்பை சுற்றுலாத்துறை பிரதேச கொட்டுக்கல் வீதி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சை தயாகமகே பொறுப்பேற்றதன் பின்னர்  சமுர்த்தி திணைக்களம் ஊடாக   6 இலட்சம் புதிய சமுர்த்திப் பயணாளிகள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கு முத்திரைகளையும் வழங்கியுள்ளார்.

அது மாத்திரமல்லாமல், அரச வங்கிகளில் கடனைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் அலைவது தவிர்க்கப்பட்டு இன்று சமுர்த்தி வங்களினூடாக இலகுவாக கடனைபெற்றுக் கொள்ள அமைச்சர் தயாகமகே வழிவகை செய்து கொடுத்துள்ளார் என்றார்.

அங்கு அமைச்சர் தயாகமகே உரையாற்றுகையில்,

பயங்கரவாதிகளை முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பின் மூலமே அழிக்க முடிந்தது. அதற்காக முஸ்லிம் மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்  கொள்கின்றேன் என்றார்.

இந்நிகழ்வில், சுற்றுலாத்துறை அபிவிருத்தி வனவளதுறை மற்றும் கிறிஸ்தவ கலாசார விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே, சுற்றுலாத்துறை அபிவிருத்தி வனவளதுறை மற்றும் கிறிஸ்தவ கலாசார விவகார அமைச்சின் செயலாளர், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் அப்துல் வாசீத், சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜௌபர், மற்றும் பொத்துவில் பிரதேச செயலாளர் திரவிய ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.









No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here