பாரம்பரிய கலைநிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்லும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் தமது பாரம்பரிய கலை நிகழ்வை நடாத்திக்கொண்டிருக்கின்றனர்.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, July 23, 2019

பாரம்பரிய கலைநிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்லும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் தமது பாரம்பரிய கலை நிகழ்வை நடாத்திக்கொண்டிருக்கின்றனர்.!!!

பாரம்பரிய கலைநிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்லும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர்  ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் தமது பாரம்பரிய கலை நிகழ்வை நடாத்திக்கொண்டிருக்கின்றனர்.!!!


பாரம்பரிய கலைநிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்லும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் இம்முறையும் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் தமது பாரம்பரிய கலை நிகழ்வை நடாத்திக்கொண்டிருக்கின்றனர்.

 இந்நிகழ்வு -
நுண்கலைத்துறைத் தலைவர் திரு சு. சந்திரகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெறுகின்றது. இன்றைய நிகழ்வுக்கு கிழக்குப்பல்கலைக்கழக முன்னாள் கலைப் பீடாதிபதி கலாநிதி இராஜேந்திரம், கிழக்குப்பல்கலைக்கழக பதில் பீடாதிபதி ஜெகநாதன்

மற்றும் - 

கலாநிதி வ. இன்பமோகன் முதுநிலை விரிவுரையாளர், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் திரு சித்தரவேல், மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் த.மலர்ச்செல்வன், பிரதேச செயலாளர் வாசுதேவன், கிழக்குப்பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் சுகுமார், ஆலய வண்ணக்கர் சுவேந்திரன் , கலைஞர்கள், விரிவுரையாளர்கள், அண்ணாவிமார்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இப்பாரம்பரிய கலை நிகழ்வு மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளது. இன்று (23) காலை நுண்கலைத்துறை மாணவர்களால் வசந்தன் கூத்தும் ஆற்றுகை செய்யப்பட்டது. 

இன்று (23) மாலை கூத்து எழுத்துப் பனுவல் உருவாக்கம் எனும் தலைப்பில் கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும், வாதகல் மடு கலைக்கழகத்தினால் கரகமும், இரவு பருத்திச்சேனை கலைமகள் கலைக்கழகத்தினால் மஞ்சள் அழகி வடமோடிக் கூத்தும் இடம்பெறவுள்ளது.

இரண்டாம் நாள் 24.7.2019 மாலை வெண்கல உருக்கு வேலைகளும் கலையாக்கமும் தலைப்பில் கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும், நுண்கலைத்துறை மாணவர்களால் புலிக்கூத்து ஆற்றுகையும், இரவு நுண்கலைத்துறை மாணவர்களாலே நொண்டி தென்மோடிக் கூத்தும் 

மூன்றாம் நாள் 25.7.2019 ஆம் திகதி மாலை மத்தளம் இணக்குதல் எனும் தலைப்பில் கலந்துரையாடலும், நுண்கலைத்துறை மாணவர்களால் மகிடிக்கூத்து ஆற்றுகையும், இரவு காஞ்சிரங்குடா நாகேந்திரா இந்து இளைஞர் மன்றத்தினால் திருத்தொண்டர் வடமோடி கூத்தும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here