2020 ஜனவரி முதலாம் திகதி அரச ஊழியர்களின் சம்பளம் 2,500 ரூபாய் முதல் 10,277 ரூபா வரை அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, August 21, 2019

2020 ஜனவரி முதலாம் திகதி அரச ஊழியர்களின் சம்பளம் 2,500 ரூபாய் முதல் 10,277 ரூபா வரை அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.!!!

2020 ஜனவரி முதலாம் திகதி அரச ஊழியர்களின் சம்பளம் 2,500 ரூபாய் முதல் 10,277 ரூபா வரை அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.!!!


தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு தனியார் துறையிடம் கோரிக்கை விடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பில் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் உரையாற்றிய அவர்,

5 கட்டங்களாக சம்பள உயர்வு வழங்க எமது அராசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இறுதிக் கட்டத்தின் கீழ் 2020 ஜனவரியில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 2,500 ரூபாவில் இருந்து 10,277 ரூபா வரை அதிகரிக்கப்படும்.

இது தவிர அரச நிறுவனங்கள்,முப்படை,நீதித்துறை என்பவற்றினதும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.சம்பள முரண்பாட்டை தீர்க்க ஜனாதிபதியினால் விசேட சம்பள மீளாய்வு ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அதன் பரிந்துரை அடிப்படையிலான அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இதற்காக உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வரும் வரை அரச ஊழியர்களுக்கு 2,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களின் கொடுப்பனவையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எல்லா ஆட்சிக் காலத்திலும் பொருட்களின் விலைகள் உயரும்.

தனியார்துறை சம்பளத்தை அதிகரிக்க எமக்கு உத்தரவிட முடியும். ஆனால் அதனூடாக அவற்றின் வர்த்தக செயற்பாடுகள் வீழ்ச்சி அடைந்து பலர் தொழில் இழக்கலாம். அவற்றுக்கு தடையின்றி செயற்பட இடமளிக்க வேண்டும்.தனியார் துறை சம்பளத்தையும் உயர்த்துமாறும் கோருகிறோம்.

லேக்ஹவுஸ் நிறுவனம் குறித்து இங்கு சேறு பூசும் வகையில் கருத்து கூறப்பட்டது.லேக் ஹவுஸ் பத்திரிகைகளை வாசிப்போர் தொகை அதிகரித்துள்ளது. அதன் தலைவர் மீது சேறு பூசினார்கள்.அவர் தொழில்தகைமை உள்ளவர் என்றும் குறிப்பிட்டார்.

தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர கூறியதாவது.

சகல அரச ஊழியர்களுக்கும் 10,000 ரூபா சம்பள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆகும் போது இதனை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க இருக்கிறோம். 2016 இல் தனியார் துறை சம்பளத்தை 2,500 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம்.

தனியார் துறை குறைந்தபட்ச சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.இதனை மேலும் 2,500 ரூபாவினால் அதிகரிக்க சட்டமூலம் தயாரிக்கப்படுகிறது.பல சம்பள நிர்ணய சபைகள் சம்பளத்தை அதிகரித்துள்ளன என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here