வேலை வாய்ப்பற்ற அனைத்து வௌிவாரிப் பட்டதாரிகளையும் அரச சேவைக்கான பயிற்சிகளில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, August 21, 2019

வேலை வாய்ப்பற்ற அனைத்து வௌிவாரிப் பட்டதாரிகளையும் அரச சேவைக்கான பயிற்சிகளில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.!!!

வேலை வாய்ப்பற்ற அனைத்து வௌிவாரிப் பட்டதாரிகளையும் அரச சேவைக்கான பயிற்சிகளில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.!!!



இதன் முதற்கட்டமாக, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற 2500 வௌிவாரிப் பட்டதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக, பொருளாதார விவகார மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இவர்களுக்கான நியமனங்களும் வழங்கப்படும் என மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு வரை, 20000 பேர் வெளிவாரிப் பட்டம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.இதேவேளை, உள்வாரிப் பட்டதாரிகள் 20000 பேரை அரச சேவைக்கான பயிற்சிகளை வழங்குவதற்கும் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார்.

வௌிவாரிப் பட்டதாரிகளை அரச சேவைக்கான பயிற்சிகளுக்காக இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வேலையற்ற பட்டதாரிகள் கொழும்பில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here