டக்ளஸ் தேவானந்தா மட்டுமே நம்பிக்கையுடன் முன்வந்தார் – மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, August 12, 2019

டக்ளஸ் தேவானந்தா மட்டுமே நம்பிக்கையுடன் முன்வந்தார் – மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு.!!!

டக்ளஸ் தேவானந்தா மட்டுமே நம்பிக்கையுடன் முன்வந்தார் – மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு.!!!



2005 ஆம் ஆண்டு நாம் பதவிக்கு வந்தபோது, 30 ஆண்டு யுத்தத்தை யாரும் முடிவிற்கு கொண்டு வர முடியுமென யாரும் நினைக்கவில்லை. புகையிரதங்களில் கொழும்பிற்கு வர முடியுமென வடக்கு மக்கள் யாரும் நினைக்கவில்லை. ஆனால் டக்ளஸ் தேவானந்தா மட்டும்தான் நம்பிக்கையுடன் இருந்தார்.

நான் செய்வேன் என்று செல்லும் ஒருவர் அல்லாமல் செய்து காட்டிய ஒருவரை கொண்டு வரவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச கூறியதாவது – வெறுப்பின் மூலம் கிடைக்கக்கூடிய எந்தவொரு விடயமும் தற்போதைய அரசாங்கத்தினுள் தனக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைவரும் ஜாதி, மதங்களுக்கு உட்படாமல் ஒன்றாக இருக்கக்கூடிய கட்சியாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கு காரணமாக இருந்த பசில் ராஜபக்ஷவிற்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாள் வராமல் இருப்பதற்கு தற்போதைய அரசாங்கம் கடந்த காலத்தில் செயற்பட்டதாகவும் ராஜபக்ஷ குடும்பத்தை அரசியலிற்கு வராமல் இருக்க செய்வதற்காக அரசியலமைப்பை மாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அவ்வாறான விடயங்களை செய்து தமது சுதந்திரத்தை பறித்தாகவும், நாட்டின் சுதந்திரத்திற்காக தனது சுதந்திரத்தை அர்ப்பணிப்பு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு மதம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை எனவும், வெறுப்பினூடாக அரசியலை எடுத்து செல்ல முடியும் என தற்போது தீர்மானமாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெறுப்பை முன்னெடுத்து செல்ல அரசியலிற்கு வருவதில்லை எனவும் தன்னை நேசிக்கும் மக்களிற்காக மாத்திரமே வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்பட்டதாகவும், 2015 ஆம் ஆண்டின் பின்னர் சிறிகொதவின் நிழல் கட்சியின் மீது விழுந்ததினால் நாட்டை நேசிப்பவர்களுக்கு அந்த இடத்தில் இருக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் குப்பை கூலங்களில் துர்நாற்றம் வீசம் போது மக்களுக்கு தங்களை நினைவு வந்ததாகவும், கொச்சிக்கடையில் இருந்து மட்டக்களப்பு வரையில் குண்டுகள் வெடித்த போது மக்களுக்கு தங்களை நினைவு வந்ததாகவும் தெரிவித்த அவர், இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உருவானதாகவும் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு மதத்தினருக்கும் தனது வணக்கஸ்தலங்களுக்கு செல்லக்கூடிய நாட்டை உருவாக்க வேண்டும் எனவும் அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை என்று எண்ணக்கூடிய நாட்டை உருவாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

365 நாட்களும் நாட்டை பாதுகாக்க கூடிய ஒருவர் நாட்டிற்கு தேவை எனவும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.தமிழ் அரசியல்வாதிகளை போல அல்லாமல், செய்வதையோ சொல்பவன், சொல்வதையே செய்பவன் என்றார்.

2015இல் ஐக்கிய தேசியக்கட்சி நாட்டை கைப்பற்றியது. ஆனால் நாடு முன்னேறவில்லை. நாம் அப்போது ஒப்படைத்த நாட்டையே மீள பொறுப்பேற்கப் போகிறோம்.

2005இல் நாம் ஆட்சிக்கு வந்தபோது நாடு எப்படியிருந்ததோ, அப்படியே இப்போதுமிருக்கிறது. இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப எம்மால் முடியும். 2005ம் ஆண்டு நாம் பதவிக்கு வந்தபோது, 30 ஆண்டு யுத்தத்தை யாரும் முடிவிற்கு கொண்டு வர முடியுமென யாரும் நினைக்கவில்லை.

புகையிரதங்களில் கொழும்பிற்கு வர முடியுமென வடக்கு மக்கள் யாரும் நினைக்கவில்லை. டக்ளஸ் தேவானந்தா மட்டும்தான் நம்பிக்கையுடன் இருந்தார்.கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பகுதிகளை அபிவிருத்தி செய்ய முடியுமென யாரும் நினைக்கவில்லை. ஆனால் எம்மால் செய்ய முடிந்தது.

நான் செய்வேன் என்று செல்லும் ஒருவர் அல்லாமல் செய்து காட்டிய ஒருவரை கொண்டு வரவேண்டும் எனவும், மக்களை ஏமாற்றாத ஒருவர் வேட்பாளராக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அன்று ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் இன்று அரசியல் எனும் வார்த்தையை வெறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை நேசிக்கும் ஒருவரை மக்கள் வேண்டிக் கொள்வதாகவும், தன்னுடைய விருப்பத்தை விடவும் நாட்டின் விருப்பமே தனக்கு முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் கூறியவற்றை அவதானத்திற் கொண்டு புதிய ஒருவரை தேடியதாகவும், தான் தெரிவு செய்யாவிடினும் கோட்டாபய ராஜபக்ஷ உங்களது சகோதரர் ஆகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

என்னுடைய சகோதரனை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கோட்டாபய எப்போது தன்னை ஜனாதிபதியாக்குமாறு கேட்டுக் கொள்ளவில்லை எனவும் உங்களை வலுப்படுத்துவதற்காக அன்றி கோட்டாவை வலுப்படுத்தவதற்காக அவரை நியமிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here