உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களின் சொத்துக்கள் முடக்கம் - பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகர.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, September 5, 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களின் சொத்துக்கள் முடக்கம் - பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகர.!!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களின் சொத்துக்கள் முடக்கம் - பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகர.!!!


கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்பதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு சொந்தமான 6 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்களை முடக்குவது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக  பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகர இன்று (5) தெரிவித்துள்ளார்.

குற்ற விசாரனை  புலனாய்வுத் திணைக்களத்தினர்  (சிஐடி) குறித்த  சொத்துக்கள் தொடர்பில் அதற்க்கான விடயங்களை  விசாரனை செய்வதாகவும் அவற்றை உரிய நேரத்தில் முடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

134 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 41 சந்தேக நபர்களின் 100 க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் ஏற்கனவே சிஐடியால் முடக்கப்பட்டுள்ளன.மேலும் சந்தேக நபர்களிடமிருந்து 20 மில்லியன் ரூபா
பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

குறித்த குண்டுத்தாக்குதல் தொடர்பாக இதுவரை 293 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 178 பேர் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்படுகிறார்கள்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில், 62 பேரை சி.ஐ.டி, 47 பேரை பயங்கரவாத புலனாய்வு பிரிவு, 41 பேரை கொழும்பில் குற்றப்பிரிவு, 16 பேரை அம்பாறை பொலிசார், மவுண்ட் லவனியா மற்றும் கொழும்பு தெற்கில் தலா நான்கு பேர், நுகேகோடாவில் மூன்று மற்றும் கண்டியில் ஒருவரை தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது.

2919 தொலைபேசி எண்கள் மற்றும் 169 ஐஎம்இஐ எண்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் சந்தேக நபர்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை சிஐடியால் கண்டுபிடிக்க முடிந்தது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here