ஆளுனரின் மீள் பரிசீலனையின் பின்பு வட மாகாண சுகாதாரப் பணியாளர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படும்.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, September 5, 2019

ஆளுனரின் மீள் பரிசீலனையின் பின்பு வட மாகாண சுகாதாரப் பணியாளர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படும்.!!!

ஆளுனரின் மீள் பரிசீலனையின் பின்பு வட மாகாண சுகாதாரப் பணியாளர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படும்.!!!

வட மாகாண சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று வழங்கப்படவிருந்த நியமனங்கள் இடைநிறுத்தப்ளட்டுள்ளன.

யாழ்.சாவகச்சேரி பொன் விழா மண்டபத்தில்  இன்று (05)  454 சுகாதாரப் பணியாளர்களுக்கான நியமனங்கள் வட மாகாண ஆளுனரால் வழங்கப்பட இருந்தன.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் முறைகேடான வகையில்  நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பாதிக்கப்பட்ட 500 இற்கும் அதிகமான சுகாதாரத் தொண்டர்கள் குறித்த மண்டபத்தில் நிகழ்வு இடம்பெறாத வகையில் தமது கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் நியமனத்தில் தமக்கு அநீதி விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்க்கான தீர்வு கிடைக்காத பட்சத்தில் தமது போராட்டங்கள் தொடரும் எனவும், குறித்த தொண்டர்கள் போராட்டத்தின் போது  தமது உடலில்  மண்ணெண்ணை ஊற்றி தீக் குழிக்கவும்  முற்பட்டுள்ளனர்.

இப் போராட்டத்தையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார பணியாளர்களை, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தனது அலுவலகத்திற்கு அழைத்து பேச்சு நடத்தியுள்ளார்.

பேச்சுவார்த்தையின் போது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்  நியமனங்களை இடை நிறுத்துவதாகவும் ஆளுனர் உறுதியளித்துள்ளார்.

வழங்கப்படவிருந்த நியமனங்கள் தொடர்பில் தவறான முறைப்பாடுகள் அனைத்தையும்  24 மணி தேரத்துக்குள் சமர்ப்பிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகை தந்த  வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா அவர்களும், குறித்த பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்துகொண்டார்.



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here