வவுனியா பெரிய புளியங்குளம் கி.மு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டு கூறுவது என்ன.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, October 2, 2019

வவுனியா பெரிய புளியங்குளம் கி.மு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டு கூறுவது என்ன.!!!

வவுனியா பெரிய புளியங்குளம் கி.மு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டு கூறுவது என்ன.!!!

இலங்கையில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வணிகம் செய்தவரின் பெயர் இக் கல்வெட்டெழுத்தில் கூறப்படுகிறது. இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் பெரிய புளியங்குளம் என்னும் இடத்தில் உள்ள ஒரு மலைக்குகையில் இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டு விசாகன் என்னும் தமிழ் வாணிகன் பெயரைக் கூறுகின்றது.

அதன் வாசகம் இது:

தமிழ்ப் பிராமி -
𑀢𑀫𑁂𑁆𑀝 𑀯𑀬𑀺𑀚 𑀓 𑀧 𑀢𑀺
𑀯𑀺𑀲𑀓𑀳 𑀯𑀺𑀡𑁂
𑀢𑀫𑁂𑁆𑀝 𑀯𑀡𑀺𑀚 𑀓𑀧𑀢𑀺
𑀯𑀺𑀲𑀓𑀡𑀼𑀳 𑀲𑁂𑀡𑀺 𑀫𑁂𑁆𑀷

தமிழ் அர்த்தம்  -
"தமெட வயிஜ க(ப)தி
விஸகஹ விணே
தமெட வணிஜ கபதி
விஸகணுஹ ஸேணி மென"

இதன் பொருள்:
தமிழ் வாணிகக் குடும்பிகள் விஸாகனுடைய (செய்வித்த) குகை
தமிழ் வாணிகக் குடும்பிகன் விஸாகன் செய்வித்த படிகள்.

இப்போது பெரிய புளியங்குளம் என்னும் பெயர் பெற்றுள்ள இடத்தில் உள்ள மலைக்குகையில் தமிழ் வாணிகக் குடும்பிகனான விஸாகன் என்பவர் பௌத்த முனிவர்கள் தங்கியிருப்பதற்காக (அக்காலத்தில் (கி.மு. 2 ஆம் நூற்றாண்டில்) அமைத்துக்கொடுத்த குகையைப்பற்றி இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்துக் கூறுகின்றது.

மேலும் தமிழகத்தில் கொடுமணல் அகழ்வின் போது கிடைக்கப்பெற்ற மட்பாண்ட ஓட்டில் "விஸாகி" என்ற பெயர் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே இவ்விரு இடங்களிலும் உள்ள பெயர்களின் ஒற்றுமை கருதி சமகாலத்தில் தமிழகத்திற்கும் தமிழீழத்திற்கும் வியாபாரத்தொடர்பு இருந்துள்ளதாக நம்பப்படுகின்றது


    தகவல் :
-  நெடுங்கேணி சானுஜன் -

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here