26.10.2019 இன்றைய நாள் எப்படி.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, October 25, 2019

26.10.2019 இன்றைய நாள் எப்படி.!!!

26.10.2019 இன்றைய நாள் எப்படி.!!!

மேஷம்:
இன்று வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். கிரகசூழ்நிலை அருமையாக உள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் விரும்பிய இடமாற்றம் உண்டாகும். எதை செய்தாலும் ஒரு குறிக்கோளுடன் செய்வீர்கள். செலவும் அதிகரிக்கும். அதே வேளையில் பணவரவும் உண்டாகும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

ரிஷபம்:
இன்று மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

மிதுனம்:
இன்று சரக்குகளை சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பீர்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோர் மிகுந்த லாபம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.

கடகம்:
இன்று குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். மேல்பதவி செல்வதற்கு எழுதிய தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள். இடமாற்றம் உறுதிபடுத்தப்படும். நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். பணவரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும்.

சிம்மம்:
இன்று குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் நடந்தேறும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள்.

கன்னி:
இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.

துலாம்:
இன்று பெரியோரின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டாலும் தப்பித்துக்கொள்வீர்கள். குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்பார்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும்.

விருச்சிகம்:
இன்று உங்கள் சுய கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக ஊழியர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பணியின் நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செய்வீர்கள். டெக்னிக்கல் சார்ந்த கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள்.

தனுசு:
இன்று புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பொதுநலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த முனைவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அகலும். மேலிடத்திடம் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும்.

மகரம்:
இன்று திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒருவகையில் அடுத்தவரிடம் வீண்பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். அதேவேளையில் நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். மேலிடத்தில் மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும்.

கும்பம்:
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு உண்டாகும். மனதில் அமைதி நிலவும். நிம்மதியாக உறங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம்.

மீனம்:
இன்று வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து விஷயங்களையும் நல்ல கண்ணோட்டத்துடன் காண்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் குவியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here