அபயகிரி விகாரை வளாகத்திலிருக்கும் தமிழ் பிராமிக் கல்வெட்டு என்ன சொல்கிறது.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, October 1, 2019

அபயகிரி விகாரை வளாகத்திலிருக்கும் தமிழ் பிராமிக் கல்வெட்டு என்ன சொல்கிறது.!!!


அபயகிரி விகாரை வளாகத்திலிருக்கும் தமிழ் பிராமிக் கல்வெட்டு என்ன சொல்கிறது.!!!

பௌத்தம் இலங்கைக்கு வந்ததாக கூறப்பட்ட காலத்தில் இருந்து மகாநாமர் மாகாவம்சத்தைத் தொகுத்தாகக் கூறப்படும் காலம் வரை சிங்கள மொழி சிங்கள இனம் என்ற குறிப்புகள் எங்கும் இடம் பெறவில்லை.

பௌத்தர்கள் பௌத்தத்தின் எதிரிகளான அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் என்ற குறிப்புகள் தான் எங்கும் விரவிக் கிடக்கின்றன.
கல்வெட்டுகள், இலக்கியங்கள், சமயக் குறிப்புகளில் தேர வாதப்பிரிவினர் பாளி மொழியிலும் மகாஞானப் பிரிவினர் சமஸ்கிரதத்திலும் எழுதியுள்ளனர். கி.பி 04 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டொன்று அபயகிரி விகாரையிலுள்ளது.

அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு என்பது அனுராதபுரத்தில் உள்ள பழங்காலத்து அபயகிரி விகாரையில் காணப்படும் ஒரு தமிழ்க் கல்வெட்டாகும். அபயகிரிச் சைத்தியத்தின் மேடையொன்றின் விளிம்புப் பகுதியை அண்டிக் காணப்பட்ட கற்பாளம் ஒன்றில் இக்கல்வெட்டுள்ளது.

கலாசார முக்கோணத் திட்ட அலுவலர்களில் ஒருவரான எஸ். ஏ. பண்டாரநாயக்கா என்பவரே இக்கல்வெட்டை முதலில் கவனித்தவர். 1998 இல் யப்பானியக் கல்வெட்டறிஞர் கராசிமா, தமிழ்நாட்டு அறிஞர்களான பேராசிரியர் சுப்பராயலு, பேராசிரியர் ப. சண்முகம், இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் சி. பத்மநாதன் ஆகியோர் அனுராதபுரத்து அழிபாடுகளைப் பார்க்கச்சென்றபோது இந்தக் கல்வெட்டுப்பற்றி அறிந்து அதைப் படியெடுத்தனர்.

👇கல்வெட்டின் தமிழ் பிராமி வடிவம்
1⃣ 𑀘𑁂𑁆𑀬𑁆𑀧𑀸𑀴 𑀗𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆
2⃣ 𑀝 𑀧𑁃 𑀓𑀺𑀭𑀺 𑀧𑁄𑀢𑀺𑀬𑀺
3⃣ 𑀮𑁆 𑀓𑀶𑁆𑀧𑀝𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆
4⃣ 𑀯𑀺𑀘𑁆𑀘 𑀢𑀶𑁃 𑀓𑀺𑀵𑀓𑁆
5⃣ 𑀓𑀼 𑀫𑁂𑀶𑁆𑀓𑀼 𑀧𑀢𑀺
6⃣ 𑀦𑁂𑀭𑀝𑀺 𑀢𑁂𑀭𑁆
7⃣ 𑀓𑀼 𑀯𑀝𑀓𑁆𑀓𑀼
8⃣ 𑀧𑀢𑀺𑀷𑁄𑁆𑀭𑀼
9⃣ 𑀬𑀼𑀫𑁆 𑀓𑀸𑀘𑀼𑀫𑁆 𑀑𑀭
🔟 𑀓𑁆𑀓𑀼 𑀫𑀼𑀫𑁆


    தகவல்:
-  நெடுங்கேணி சானுஜன்  -



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here