விவசாய உற்பத்திகளுக்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுங்கள் - அரசிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் கோரிக்கை.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 8, 2020

விவசாய உற்பத்திகளுக்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுங்கள் - அரசிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் கோரிக்கை.!!!

விவசாய உற்பத்திகளுக்கு  நியாயமான விலையை பெற்றுக்கொடுங்கள் - அரசிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் கோரிக்கை.!!!

வடக்கு மாகாணத்தில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த  முடியாது அநியாய விலைக்கு விற்பனை செய்யும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார். கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அரசின் உயர் மட்டத்தின் கவனத்திற்கு நேரடியாக தெரியப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலும் தெரிவித்ததாவது,

வடக்கில் குறிப்பாக கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை  சந்தைப்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், இதனால் தாங்கள்  மிக மிக குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எனது கவனத்திற்குகொண்டு வந்தனர். ஊரடங்குச் சட்டம் காரணமாகவும், வெளிமாட்டங்களுக்கிடையேயான போக்குவரத்து கட்டுப்பாடுப்பாடுகள் காரணமாகவும் விவசாய உற்த்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அனைத்து விவசாயிகளும் தங்களது உற்பத்திப் பொருட்களை உற்பத்திச் செலவை கூட ஈடுசெய்ய முடியாத அளவில் விற்பனை செய்ய தள்ளப்பட்டுள்ளனர். எனவே அரசு உடனடியாக விவசாயிகளை காப்பாற்றும் வகையில் நியாயமான விலை நிர்ணயத்தை நடைமுறைப்படுத்தி உற்த்தியாளர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்

அதேபோன்றே கடற்றொழிலாளர்கள் ,நன்னீர் மீன் பிடிப்பாளர்களும் கடலுணவுப்பொருட்களை சந்தைப்படுத்துவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். எனவே இவர்களுக்கும்  நியாயத்தை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தான் அரசின் உயர் மட்டத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here