மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் திருநங்கை நமீதாவா.? - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 10, 2021

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் திருநங்கை நமீதாவா.?

 பிக் பாஸ் சீசன் 5ல் பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் கலந்துகொண்டவர் திருநங்கை நமீதா மாரிமுத்து. இறுதி போட்டியாளர்களில் ஒருவராக வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஒரு வாரம் கூட வீட்டில் இருக்காத நமீதா தனது விருப்பத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியேறினார். 


உடல் நலக் குறைவு காரணமாக நமீதா வெளியேறியதாக கூறப்பட்ட போதும் உண்மையான காரணம் இது வரை தெரியவரவில்லை.


இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நமீதா மாரிமுத்து மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போவதாக கூறப்பட்டது. இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் நமீதாவிடம் ரசிகர்கள் கேட்ட போது இது தொடர்பாக பிக் பாஸ் குழுவினரிடம் தான் கேட்க வேண்டும்.

 

என்னிடம் மீண்டும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் படி யாரும் கேட்கவில்லை, அப்படி கேட்டால் உங்களுக்கு பதில் சொல்கிறேன், இது பற்றி அறிந்துகொள்ள வேண்டுமானால் பிக் பாஸ் குழுவினரிடமே கேளுங்கள் என கூறியுள்ளார். 


இதனை வைத்து பார்க்கும் போது மீண்டும் வீட்டிற்குள் செல்லும் எண்ணம் நமீதாவிற்கு உள்ளது.




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here